
ரயில்களில் தீப்பிடிப்பது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், இரவுநேர ரயில் பயணங்களில் மொபைல்போன் சார்ஜ் செய்வதற்கு ரயில்வே வாரியம் தடை விதித்துள்ளது.
இதன்படி, அனைத்து ரயில் பெட்டிகளிலும் உள்ள சார்ஜிங் பாயிண்ட்டுகள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அணைத்து வைக்கப்பட வேண்டும் என மண்டலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.