
விஜய் தொலைக்காட்சியில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறியுள்ளார்.
இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சமையல் அணியில் இருந்த பிளாக் பாண்டிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறிய பிளாக் பாண்டி மீண்டும் வைல்டு கார்டு சுற்றின் மூலம் நிகழ்ச்சிக்குத் திரும்புவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.