
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48வது உலகத் திறன் போட்டியில் இந்தியா 6 வெள்ளி மற்றும் 20 சிறப்புப் பதக்கங்களுடன் மொத்தம் 26 பதக்கங்களை வென்று 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்றவர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 பேருக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 பேர் என தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.