
உலகில் சமூக பாதுகாப்பு கிடைக்கப் பெறாதவர்கள் வறுமையானவர்கள் என அழைக்கப்படும் நிலையில், உலகம் முழுவதும் 83 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர்.
உலகளவில் 280 கோடி பேருக்கு பாதுகாப்பான வீடுகள் இல்லை எனவும், வறுமையால் பாதிக்கப்படுவதால் மனித உரிமை மீறப்படுவதாகவும் பிரான்சின் ஜோசப் ரெசின்கி குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சின் ஜோசப் ரெசின்கியின் முயற்சியால் 1987 முதல் ஐ.நா. சார்பில் அக்டோபர் 17-ல் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதுடன், இந்த ஆண்டின் மையக்கருத்து 'அனைவருக்கும் பாதுகாப்பான வீடு' என்பதாகும்.