
பிக் பாஸ் கன்னடம் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான தனுஜா புட்டசாமி, அனுஷ் கோரக் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
நடிகர் கிரண் அப்பாவரம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் குஷ்லு, நம்ரிதா எம்.வி மற்றும் ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள், இப்படம் ஒரு புதிய வகை ஹாரர் திரில்லர் கதையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.