
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் நவீன டைவ்-எல்டி (Dive-LD) வகை ஆளில்லா நீர்மூழ்கி ட்ரோனை ஈரான் புரட்சிக்கர ராணுவப் படை கைப்பற்றியுள்ளது.
ஈரான் ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே அந்த நீர்மூழ்கி கருவி பழுதடைந்து செயல்பாட்டில் இல்லை என்று அமெரிக்காவின் பென்டகன் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நீர்மூழ்கி எந்தவொரு ரகசிய ரேடார் கருவிகளையோ அல்லது முக்கியமான தரவுகளையோ கொண்டிருக்கவில்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.