
பெங்களூருவில் 4-வது குளோபல் செஸ் லீக் போட்டி இன்று தொடங்கி செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மொத்தம் 9.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.