
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றுள்ளார்.
ருமேனியா வீரர் காலின்ஸ் பிலிமனுடன் மோதிய லக்ஷயா சென், 16-21, 21-8, 21-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் இந்த கவுரவமிக்க போட்டி, நேற்று தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடைபெறுகிறது.