
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 500 ரூபாய் வரி செலுத்தியவர்களுக்கு 7,500 ரூபாய் வரை வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சி மற்றும் அரசுக்கு இடையிலான ஈகோ மோதல் மற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளே இந்த வரி உயர்வு குழப்பத்திற்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.