
சுவாசக் கோளாறு காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த பாபு, கடந்த 9-ஆம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மருத்துவர் குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.