
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் வீரர்களின் பயிற்சி மற்றும் உபகரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.800 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் 35 வகையான விளையாட்டுகளில் 501 வீரர், வீராங்கனைகள் களமிறங்கவுள்ள நிலையில், இவர்களில் 310 பேர் முதன்முறையாக ஆசிய விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
இளம் வீரர், வீராங்கனைகளின் வருகை எதிர்காலத்தில் இந்தியாவின் பதக்க வேட்டைக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஹல் தெரிவித்துள்ளார்.