
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
எம்.எல்.ஏ. பேர வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் கையெழுத்திட்டு வந்த செந்தில் பாலாஜிக்கு பதிலாக, அவரது தம்பி அசோக் குமார் மட்டுமே இன்று ஆஜரானார்.
செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தம்பி அசோக் குமார் விளக்கமளித்துள்ளார்.