
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.986 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இஸ்ரோவின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை நிர்வகிக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
2,233 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்த ஏவுதளத்திற்கு கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஏவுதளம், சிறிய ரக ராக்கெட்டுகளை குறைந்த எரிபொருளில் விண்ணில் செலுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.