
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 41-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியை 11.49 வினாடிகளில் கடந்து அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2025-ல் கொச்சியில் நடைபெற்ற தேசிய போட்டியில் அவர் 11.54 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததே சாதனையாக இருந்தது.