
அடோப் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் மூத்த மென்பொருள் தரப் பொறியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் ஸ்ட்ரான், பணிநீக்கத்திற்குப் பின் ஓராண்டு வேலை தேடியும் கிடைக்காததால் பேருந்து ஓட்டுநர் பணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த இவர், தனது புதிய பணி குறித்து லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முந்தைய தொழில்நுட்பப் பணியை விட புதிய பணியில் சம்பளம் குறைவாக இருந்தாலும், பள்ளி குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.