
சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை போனில் சிம் வைத்துக்கொண்டு வை-பை மூலம் மட்டும் மற்ற சாதனங்களில் அல்லது போன்களில் செயலிகளை பயன்படுத்துபவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய உத்தரவானது மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அனைத்து முக்கிய குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடக செயலிகளுக்கும் பொருந்தும்.