
புதிய தலைமைச் செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் இடம் தேர்வு செய்ய ஆய்வு நடத்தப்பட்டதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இது குறித்த தகவல் தற்போது அதிகார அமைப்பில் இல்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.
இடத்தை யார் தேர்வு செய்தது, இது மக்கள் ஆட்சியா அல்லது ஜோதிடர் ஆட்சியா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.