
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 176 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இதன்மூலம் ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்கா முதலிடம் பிடித்தது.
ஆஸ்திரேலியா ஒரு இடம் சரிந்து 2வது இடத்திலும், நியூசிலாந்து மற்றும் இந்திய அணி முறையே 3 மற்றும் 4வது இடங்களிலும் உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.