/nakkheeran/media/media_files/2026/09/27/cbe-police-2026-09-27-18-30-48.jpg)
கோவையில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கர்நாடக சொகுசு காரை மடக்க முயன்றபோது, தலைமை காவலர் வேல்முருகன் ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார்.
சுமார் 40 கி.மீ. தூரம் காரைத் துரத்திச் சென்று அவிநாசியில் மடக்கிய காவலர்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த பாபுதாரா ராஜேஷ், சுரேஷ் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 300 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் துணிச்சலாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.