/polimer-news/media/media_files/2026/10/15/8-2026-10-15-13-49-24.jpg)
அரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துவிட்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விலைக் கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் உரிய முடிவு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.