
ராமாயணத்தில் தோன்றும் ராவணன் முற்றிலும் கெட்டவர் அல்ல என்றும், அவரைக் உதாரணமாக கொண்டு நமக்குள் இருக்கும் நன்மை தீமைகளை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணம் ரைஸ் ஆஃப் எ லெஜெண்ட்’ படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ள நிலையில், படம் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.