
சென்னை மறைமலை நகரில் உள்ள தனது 350 ஏக்கர் தொழிற்சாலையில் மின் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்ய போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2025 இறுதியில் தமிழக அரசுடன் கையெழுத்தான ரூ.3,250 கோடி முதலீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆலை மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது.
ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் மற்றும் 3.40 லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை, 2021-ல் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது.