
நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, கோவை மாவட்டத்தில் புதிய இயக்கங்களை தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, தலா 5 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டத் தலைவர் வீதம் நியமித்து உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தனது பிறந்தநாளில் ரசிகர்களைச் சந்தித்த பிறகு, அரசியல் வருகைக்கான மறைமுக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.