
‘அருவி’ பட இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார்.
இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இப்படத்தை இயக்குவதுடன், முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார், இதற்காக அவர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனைத் தொடர்ந்து முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்ற உள்ளார்.