
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இம்மார்ட்டல்' திரைப்படத்தின் 'ஷி இஸ் மை செல்லக்குட்டி' என்ற இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏகே பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார், மேலும் இதில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் பாணியிலான இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.