
இந்தியா முழுவதும் 100 சதவீதம் நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில் 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களுடன் புதிய தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க ஜியோ முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் சோதனை முயற்சியை நடத்தவும், 2030க்குள் 400 முதல் 450 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும் ஜியோ திட்டமிட்டுள்ளது.
2035க்குள் முழு 1,600 செயற்கைக்கோள் தொகுப்பையும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.