
கமாடிட்டி வர்த்தக தளமான எம்சிஎக்ஸ் பங்குகள் கடந்த ஓராண்டில் 102 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபத்தை வழங்கியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 88 சதவீதம் உயர்ந்து 702 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 413 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 7.03 லட்சத்திலிருந்து 13.72 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இப்பங்கு அடுத்த சில வாரங்களில் 3,500 ரூபாய் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.