
சென்னையில் இன்று (நவம்பர் 2) முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் வைல்டு கார்டு மூலம் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி அத்கர், சஹாஜா யமலபள்ளி, மாயா ராஜேஸ்வரன் ரேவதி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
சென்னையில் நடைபெறும் கடைசி ஆண்டாக இம்முறை இந்தப் போட்டி நடைபெறவுள்ளதாகவும், இதன் பிறகு பிலிப்பைன்ஸுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.