தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூகநீதி கணக்காய்வு ஆணையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சாதிவாரி மற்றும் சமூகப் பொருளாதார நிலை ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மேலும், முதியவராக மதம் மாறியவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.