
ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் இந்தியா இடையிலான தரைவழித் தொடர்பை வலுப்படுத்த நேரடி சரக்கு ரயில் பாதையை அமைக்க ரஷ்யா முன்மொழிந்துள்ளது.
இந்த வழித்தடம் ரஷ்யாவிலிருந்து தொடங்கி துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை அடையும் என ரஷ்யத் துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின் தெரிவித்துள்ளார்.
கடல் வழித்தடங்களில் உள்ள அபாயங்களைக் குறைக்க இந்த மாற்றுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், பயணக் கட்டணம் மற்றும் தொடக்கத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.