
வெளியாகாத 'ஃபோர்டிட்யூட்' படத்தின் மாஸ்டர் காப்பி அடங்கிய ஹார்ட் டிரைவ் காணாமல் போன விவகாரத்தில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது ரூ.900 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் உருவாகும் இந்த ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்காக இதுவரை 45 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாட்டிற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று நெட்பிளிக்ஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.