
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்கும் நுகர்வோருக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதி இளந்திரையன், இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 7-க்கு தள்ளிவைத்தார்.
கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 5 கடைகள் மூடப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.