
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோனிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், லாசர் குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மகிமை தாஸ் மைசூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறையினர் தரப்பில் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.