
வங்கக்கடலில் உருவான முரசு புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்து இன்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப்புயல் மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை நெல்லூர் - நரசப்பூர் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும்.
புயல் எச்சரிக்கையால் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.