
ரூ.2,000 வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 10 ஏ-யின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், சில்லறைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.