
பிளாக் காபியில் உள்ள குளோரோஜெனிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்களுடன் போராடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
தினமும் அளவோடு பிளாக் காபி பருகுவது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், அல்சைமர்ஸ், பார்கின்சன்ஸ் மற்றும் டைப் 2 டயாபடீஸ் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
கஃபீன் காரணமாக உடலில் செயல்மாற்ற வேகம் அதிகரித்து எடை குறையவும், கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கவும் இது துணைபுரிகிறது.