
மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெறவுள்ளது.
இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.