
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் VF9 என்ற 7 சீட்டர் மின்சார எஸ்யுவி காரை அறிமுகப்படுத்த காப்புரிமை பெற்றுள்ளது.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 594 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும் என்றும், 35 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
நடப்பாண்டு இறுதியில் சந்தைக்கு வரவுள்ள இந்த காரின் தொடக்க விலை சுமார் ரூ.65 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.