
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பை ரூ.100-க்கு விற்பனை செய்கிறது.
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் பண்டகசாலைகளில் உள்ள 218 விற்பனை நிலையங்கள் மூலம் இன்று முதல் 7-ந்தேதி வரை இந்த தொகுப்பு விற்பனை செய்யப்படும்.
சென்னையில் 4 நடமாடும் கடைகள் மூலமாகவும் இந்த தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.