
ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடரின் 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதுடன் ஷசாங்க் சிங் அதிகபட்சமாக 11 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 3.5 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.