
நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் உள்ள நரிடான் கிராமத்தில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு கடுனா அமைதி மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க் தலைவர் தெரெக் கிறிஸ்டோபர், கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் தாக்குதல் நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன, இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.