
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் சாட்சிகளை மிரட்டக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர்.
விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.