
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், ஜப்பான் தனது ராணுவக் கொள்கைகளை மாற்றியமைத்து டோமஹாக் ஏவுகணையை சோதித்ததற்கு கடும் ராணுவ எச்சரிக்கை விடுத்தார்.
ஜப்பான் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 1600 கி.மீ. தூரம் தாக்கும் டோமஹாக் ரக நீண்ட தூர குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது வடகொரியாவின் கோபத்திற்குக் காரணம்.
ஜப்பான் தனது அமைதி கொள்கையிலிருந்து விலகி, அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாக கிம் யோ ஜோங் குற்றம் சாட்டினார்.