
போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருடன் அவரது சகோதரர் மஹர் அல் ஆசாத் மற்றும் உறவினர் அடேப் நஜிப் ஆகியோருக்கும் சிரியா சிவில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2024-ல் கிளர்ச்சிப் படையினர் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆசாத் ரஷ்யாவிற்குத் தப்பியோடிய நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.