
தமிழகம் முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ரொக்கமாக ரூ.28,24,945 மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட ரூ.89,89,673 என மொத்தம் ரூ.1,18,14,908 கண்டறியப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.