
கடந்த மாதம் தான் சுதந்திரமாக இருப்பதாக அனுபமா பரமேஸ்வரன் பதிவிட்ட நிலையில், அது ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து மீண்டதற்கான பதிவு என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தன்னை கட்டுப்படுத்திய அந்த நபர் ஒரு நார்சிஸ்சிஸ்டிக் நபர் போல நடந்துகொண்டதாகவும், இரண்டு வருடங்களாக உடல் மற்றும் மன ரீதியான வலியை அனுபவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தவறான புரிதல்களைத் தவிர்க்கவே இந்த உண்மையை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதாகக் கூறிய அனுபமா, அந்த சுழற்சி முறையில் நிம்மதியை விட பயத்தையே அதிகமாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.