
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை மொத்தம் 6,186 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் காங்கோ அரசுக்கு, உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிகளை வழங்கி உதவி வருகிறது.