
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை கையுறைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வரும் 15-ம் தேதிக்குள் பணியாளர்கள் உடை மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.