
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் தடகள வீரர் குல்வீர் சிங் ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 1,500 மீட்டர் பந்தயத்தை 3 நிமிடங்கள் 36.72 விநாடிகளில் நிறைவு செய்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
ஏற்கனவே ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி வென்றிருந்த அவர், ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு வெவ்வேறு ஓட்டப் பந்தயங்களில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.