
திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 78-லிருந்து 100 ஆக உயர்த்துவது மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.